Monday, August 17, 2009

Rajini

ஒரு படம் நன்றாக இருந்தால் அந்தப் படம் சம்பந்தப்பட்டவர்களை அழைத்து தோள்தட்டி பாராட்டும் பரந்த குணம் ூப்பர் ஸ்டாருக்கு உண்டு. தமிழில் சென்ற இரண்டு வருடங்களில் வெளிவந்த அனைத்து நல்ல படங்களின் படைப்பாளிகளும் இந்த பாராட்டு மழையிலிருந்து தப்பியதில்லை.

சில நாட்கள் முன்பு ஒருவருக்கு ர‌ஜினி விருந்து வைத்து பாராட்டியிருக்கிறார். அவர் எந்தப் படத்தின் இயக்குனருமல்ல. ஹீரோவும் அல்ல. பிறகு...?

சமீபமாக போதை காமெடியில் அனைவரையும் புரையேறச் செய்துவரும் மயில்சாமிதான் அந்த அதிர்ஷ்டசாலி. குஞ்சு குளுவான்கள் இல்லாமலே குபீர் சி‌ரிப்பை வரவழைப்பதில் மயில்சாமி கெட்டிக்காரர். அவரது காமெடியை பல படங்களில் பார்த்து வியந்த ர‌ஜினி, அவரை தனது ராகவேந்திரா திருமண மண்டபத்துக்கு வரவழைத்து தன் கையால் விருந்து ப‌ரிமாறி பாராட்டியிருக்கிறார்.

வயிறுடன் மனசும் சந்தோஷத்தில் நிறைய, இதேபோல் பாராட்ட யாருக்கு மனசு வரும்.